கல்லூரி சாலை!
August 11, 2012
பழக்கமில்லா முகங்களின் இடையே
பதட்டத்துடன் அமர்ந்து இருந்தேன்..
மௌன மொழிகள் பாடிய பிறகு
மெல்ல அவன் பெயரைக் கேட்டேன்..
காலம் மெல்ல கடந்த போது
காற்றில் கலந்த ஆசான் அறிவுரை!
பள்ளிக்கூட நினைவுகள் இடையே
மறைந்து விட்ட காலைப் பொழுது..
உன்னத மாலை வருகை நோக்கி
உறக்கம் கொண்டேன் உண்ட களைப்பில்!
விடுதி அறைகள் திறக்கும் போதே
கண்ணீர் துளிகள் கசியக் கண்டேன்..
பெற்றோர் பிரிவை மறக்கச் செய்த,
பிரியாச் சொந்தமாய் கிடைத்த நட்பு..
நண்பன் சொன்ன திசையில் பயணிக்கிறேன்
என் கல்லூரி சாலையில் நினைவுகளுடன்!